இருமொழிக் கல்வி முத்திரை

இருமொழிக் கல்வி முத்திரை என்பது இரு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அவர்களது மாநிலக் கல்வித்துறை வழங்கும் முத்திரை ஆகும்.

  • இந்த முத்திரையைப் பெறுவதற்கு, மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேர்வுகளில், இடைநிலைப் பிரிவில் உயர் வகுப்பில் (Intermediate High) தேர்ச்சி பெற வேண்டும்.
  • இந்தத் தேர்வை 9 - 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் பள்ளி மாணவர்கள் எழுதலாம். இந்தத் தேர்விற்குக் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பயிற்சித் தேவைப்படும்.
  • தமிழ் மொழிக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இரு தேர்வுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் வசிக்கும் மாநிலத்தைப் பொறுத்து, அதற்குரியத் தேர்வைத் (Exam) தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • சில மாநிலங்களில் இந்த இருமொழி முத்திரைத் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஆகையால், அவர்கள் The Global Seal முத்திரைக்கு விண்ணப்பிக்கலாம்.
  • உலகத்தமிழ்க் கல்விக்கழகத்தில் நான்காவது பாட நிலையைத் தாண்டிய மாணவர்கள் மற்றும் 6 - 9 ஆம் வகுப்புகளில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, அவர்களது தமிழ் ஆசிரியர்களால், இத்தேர்விற்கான தனி வகுப்புகள் நடத்தப்படும்.
Seal Of Bi-literacy Registration
இருமொழிக் கல்வி முத்திரையில் இணைய
Seal Of Bi-literacy Stages - இருமொழி அறிவுக்கல்வி நிலைகள்